Home உலகம் 20-வது காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது! 71 நாடுகள் பங்கேற்பு!

20-வது காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது! 71 நாடுகள் பங்கேற்பு!

791
0
SHARE
Ad

Glasgow Commonwealth Gamesகிளாஸ்கோ, ஜூலை 24 – 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இரவு விமரிசையாக தொடங்கியது.

இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுகள் மற்றும் அதன் ஆதிக்க நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் போட்டித்தொடர் காமன்வெல்த் விளையாட்டு.

commonwealth_flagsதமிழில் பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் என்றும் கூறலாம். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து அதிக நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு தொடராக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த போட்டித்தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். 1930-ம் ஆண்டு முதல் இதுபோன்ற போட்டித்தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு முன்பாக, 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன.

Common_wealth4500 வீரர்கள் பங்கேற்பு:

இந்நிலையில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

collageஇந்திய தரப்பில் 215 பேர் பங்கேற்பு:

இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஹாக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ,

லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

Usain-Boltஉலக நட்சத்திரங்கள்:

உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். மலேசிய நேரப்படி நேற்று நள்ளிரவு 3.00 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி நேற்று இரவு 8 மணி) கோலகலமான தொடங்கியது.

இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்), இறுதி கட்ட தொடர் ஓட்டமாக, தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்படும்.

cwgஇதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார். 71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெற்றது.

இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தேசிய கொடியை ஏந்த இருக்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. இன்றில் (24-ம் தேதி) இருந்து போட்டிகள் தொடங்கும்.

TENNIS-GBR-WIMBLEDONடெண்டுல்கர் பங்கேற்பு:

காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தொடக்க விழா 3 மணி நேரம் நடைபெற்றது.

2 ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்றார்கள். டென் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சன் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.