லண்டன், நவம்பர் 11- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை போர்க்குற்றம் காரணம் கூறி புறக்கணித்தால் காமன்வெல்த் அமைப்பை பலவீனப்படுத்திவிடும் என பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹக் கூறினார்.
வில்லியம் ஹக் மேலும் கூறுகையில், மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் தன்மை குறித்து புரிந்து கொள்கிறோம். ஆனால், மாநாட்டை புறக்கணிக்க முடியாது. இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணித்தால், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான நடவடிக்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் காமன்வெல்த் அமைப்பை பலவீனப்படுத்திவிடும் என கூறினார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பிரதமர் டேவிட் கேமரூன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் பல கேள்விகளை கேட்க உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் மாநாட்டை கனடா பிரதமர் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்க உள்ளார்.