Home இந்தியா கொச்சையான வார்த்தைகளால் விமர்சிப்பதா? பிரதமர் மன்மோகன் கண்டனம்

கொச்சையான வார்த்தைகளால் விமர்சிப்பதா? பிரதமர் மன்மோகன் கண்டனம்

439
0
SHARE
Ad

manmohan-singh_151211

ராய்ப்பூர், நவம்பர் 11- “நாங்களும், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கிறோம். அதற்காக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. நாகரிகமாகத் தான் விமர்சிக்கிறோம்” என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பாரதிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் 11 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ்  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ராய்ப்பூரில்  பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது : “சத்தீஸ்கரில்  இன்னும்  நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு மத்திய அரசு கொடுத்த நிதியை சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனநாயக  அரசு சரியாக பயன்படுத்தாதது தான்  இதற்கு காரணம். இந்த மாநிலம்  வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கும்  பாரதிய ஜனநாயக அரசு தான் காரணம். அனைத்து துறைகளிலும் சத்தீஸ்கர் அரசு தோல்வி அடைந்து விட்டது. அரசியல் கட்சிகள் என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதும் குற்றம் சாட்டி பேசுவதும் வழக்கம் தான்.நாங்களும், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கத் தான் செய்கிறோம். அதற்காக, அவர்ளைப் போல் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது இல்லை. நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி தான் விமர்சிக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் எங்கள் மதிப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம். சத்தீஸ்கரில் பொது வினியோக திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தான் காரணம். சத்தீஸ்கரில் அனைத்து துறைகளிலும் ஒட்டு மொத்தமாக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்” என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

“சத்தீஸ்கர் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை’ என பிரதமர் பேசினாலும், தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக பாரதிய ஜனநாயகதான் அங்கு  ஆளும் கட்சியாக உள்ளது. ரமண் சிங் தான் 10 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகிக்கிறார்” என்றும் கூறினார்.