இந்தியாவில் விமான போக்குவரத்து அதிமாகிக் கொண்டே இருந்தாலும், அதனை இலாபகரமானதாக மாற்றுவதற்கான வழி இன்னும் அறியப்படவில்லை.
‘ஆசிய பசிபிக் விமான ஆலோசனை மையம்’ (Asia Pacific Aviation Consultancy)-த்தின் கருத்துகணிப்பின் படி “இந்த வருடத்தில், கடந்த மார்ச் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இலாபகரமானதாக்க அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அதன் முன்னோட்டமாக தான் தற்போது அந்நிறுவனத்தின் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
இது பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கூறுகையில், “ஜெட் ஏர்வேஸை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த முயற்சிகள் உடனடி பலனை அளிக்காது. எனினும் எதிர்வரும் 2017-ம் நிதியாண்டில் ஜெட் ஏர்வேஸ் நிலையான பொருளாதாரத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகள் வகிக்கும் அபுதாபியின் எட்டிஹாட் நிறுவனம், ஜெட் ஏர்வேஸின் திட்டங்களை உற்று நோக்கி வருவதாகவும், விரைவில் அதன் திட்டங்கள் நல்ல பலனை அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.