Home அவசியம் படிக்க வேண்டியவை 27ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை மீண்டும் ஒத்திவைப்பு

27ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை மீண்டும் ஒத்திவைப்பு

507
0
SHARE
Ad

MIC-President-Palanivelகோலாலம்பூர், ஜூலை 24 – எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி சிரம்பானில் காலை 9.00 மணிக்கு நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஒத்திவைப்புக்கான காரணங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பதோடு புதிய தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி நடைபெறவிருந்த மத்திய செயலவைக் கூட்டம், காலை 9.00 மணிக்கு நடைபெறும் என்றும் அதன்பின்னர் காலை 10.00 மணிக்கு நெகிரி செம்பிலான் மாநில ஆண்டுப் பேராளர் மாநாடு நடைபெறும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மூன்று மாதங்களுக்குப் பின்னர் கூட்டப்படும் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு மணிநேரம்தானா என்பது குறித்து மத்திய செயலவை உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளதாக செல்லியலில் செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது திட்டமிட்டபடி நெகிரி செம்பிலான் ஆண்டு பேராளர் மாநாடு மட்டுமே எதிர்வரும் 27ஆம் தேதி சிரம்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஇகா மத்திய செயலவையின் முந்தையக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் காஜாங் இடைத் தேர்தலின்போது நடைபெற்றது.