Home உலகம் ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 60 பேர் பலி!

ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 60 பேர் பலி!

464
0
SHARE
Ad

busபாக்தாத், ஜூலை 25 – ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

ஈராக்கில் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றது. ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய அந்த அமைப்பினர் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மொசூல் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தீவிரவாதிகள் அந்நகரம் முழுவதும் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

11-dead-in-women-university-bus-bomb-blast-in-quettaநேற்று முன்தினம் வடக்கு பாக்தாத்தில் கைதிகளை அழைத்துக்கொண்டு சென்ற பேருந்து ஒன்றின் மீது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் அந்த பேருந்தில் பயணம் செய்த கைதிகள் மற்றும் காவல் துறையினர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.