Home கலை உலகம் காதல் பாட்டை கேட்டால் அனுஷ்கா ஞாபகம் வருது – இயக்குநர் லிங்குசாமி

காதல் பாட்டை கேட்டால் அனுஷ்கா ஞாபகம் வருது – இயக்குநர் லிங்குசாமி

823
0
SHARE
Ad

anushka_lingusamy001சென்னை, ஜூலை 25 – அஞ்சான் படத்தில் வரும் காதல் ஆசை பாடலை கேட்டால் இயக்குனர் லிங்குசாமிக்கு அனுஷ்காவின் ஞாபகம் வருகிறதாம். சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஞ்சான் பட பாடல்களில் சூரஜ் சந்தோஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள காதல் ஆசை பாடல் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

காதல் ஆசை பாடலை கேட்டால் உங்களுக்கு சட்டென்று யார் நினைவுக்கு வருகிறார்கள் என்று அஞ்சான் இயக்குனர் லிங்குசாமியிடம் கேட்டபோது, அதற்கு அவர் அனுஷ்கா பெயரைக் கூறினார்.

#TamilSchoolmychoice

Director Lingusamy Stills @ Vettai Press Meetஇது குறித்து லிங்குசாமி கூறுகையில், “நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன். எந்த காதல் பாட்டை கேட்டாலும் என் நினைவுக்கு வருபவர் அனுஷ்கா தான் என்றார். அனுஷ்கா வெறியராக இருக்கும் லிங்குசாமி இதுவரை அவரை தனது படங்களில் நடிக்க வைத்ததில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.