டெல்லி, ஜூலை 25 – உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைக்கும் பணம் மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.
இந்த பட்டியலில் சச்சின் முன்பெல்லாம் ஆதிக்கம் செலுத்திவந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றபிறகு அடுத்த சச்சினாக சென்னை தலை, டோணி முடிசூட்டிக்கொண்டுள்ளார்.
2013-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்துள்ள விளையாட்டு வீரர்களில், உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி 5வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.126 கோடி (மலேசிய ரிங்கிட் 6,96,000,00) சம்பாதித்துள்ளார்.
கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியோனல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் டோணி அதிகம் சம்பாதித்துள்ளார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா ரூ.276 கோடி (மலேசிய ரிங்கிட் 15,24,90,000) சம்பாதித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், ஃபில் மிக்கெல்சன் ஆகியோர் முறையே, 2 மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளனர். டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டோணிக்கு முந்தைய இடமான 4வது இடத்திலும், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.