Home அவசியம் படிக்க வேண்டியவை இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகின்றது – அமெரிக்கா கண்டனம்!

இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகின்றது – அமெரிக்கா கண்டனம்!

414
0
SHARE
Ad

Rajapakse-Sliderகொழும்பு, ஜூலை 29 – இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக நடக்க இருந்த பயிலரங்கம், அந்நாட்டு அரசால் இரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இலங்கையில், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக பயிலரங்கம் ஒன்றை நடத்த, சம்பந்தப்பட்ட அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பயிலரங்கம் நடத்துவதற்கு எதிராக சில சிங்கள அமைப்புகள் கடும் போராட்டங்கள் நடத்தின. இதனைத் தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி இலங்கை அரசு, பயிலரங்கத்தை  இரத்து செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் பேச்சுரிமைக்கும், அது தொடர்பான கூட்டங்களுக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவது பேச்சுரிமையை அச்சுறுத்தும் செயலாகும். இலங்கையில் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கப்பட அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் இதுவரை, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கான   பயிலரங்கம் மூன்று முறை இரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் ராஜபக்சே (படம்) தலைமையின் கீழ் இயங்கி வரும் இலங்கை நாட்டில் பத்திரிக்கைத் துறையினருக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும், உரிமை மறுப்புகளும் அனைத்துலக எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து வருகின்றன.