Home நாடு பக்காத்தானில் பிளவு உண்டாகாது – அன்வார் உறுதி

பக்காத்தானில் பிளவு உண்டாகாது – அன்வார் உறுதி

397
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர், ஜூலை 30 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் இருந்து டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நீக்கப்படுவதால், பக்காத்தானுக்குள் எந்த ஒரு பிளவும் ஏற்படாது என பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், காலிட் இப்ராகிமே மந்திரி பெசாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது குறித்து இன்னும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஹாடிக்கு ஹரி ராயா தான் வாழ்த்துகளை தான் தெரிவித்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

மேலும், பக்காத்தான் கூட்டணியில் பிளவு ஏற்படுவது போல் எந்த ஒரு அறிகுறியையும் தான் பார்க்கவில்லை என்று கூறிய அன்வார், கட்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

நாம் அனைவரும் பக்காத்தான் கட்சியின் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

“பிகேஆர், பாஸ் மற்றும் ஜசெக கட்சிகளைச் சேர்ந்த பக்காத்தான் தலைவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இம்மூன்று தலைவர்களும் இணைந்து இனி வரும் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றும் நம்புகின்றேன்” என்றும் அன்வார் தெரிவித்தார்.