Home இந்தியா உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க மறுப்பு!

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க மறுப்பு!

549
0
SHARE
Ad

Kerry-jaitley_PTIபுதுடில்லி, ஆகஸ்ட் 1 – உலக நாடுகளுக்கு இடையே வர்த்தக வசதியை மேம்படுத்துவதற்காக உலக வர்த்தக அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

உலக நாடுகளிடையே தாராள மயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழு கூட்டம் ஜெனீவாவில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. பல்வேறு நாடுகளுக்கு உற்பத்திப் பொருட்கள் கொண்டு செல்வதை தாராளமயமாக்குவதற்கு சுங்க விதிமுறைகளைத் தளர்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமெனில், ஏழை நாடுகளில் உள்ள மக்களின் உணவு பாதுகாப்பிற்கு, உலக வர்த்தக அமைப்பு உறுதி அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

#TamilSchoolmychoice

மேலும், தங்கள் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக உணவு தானியங்களைக் கையிருப்பு வைத்திருக்கவும், மானியங்களை உலக வர்த்தக அமைப்பின் வரம்பையும் தாண்டி அளிக்க வழிவகுக்கவும் மற்றொரு நிரந்தர ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்றும் இந்தியா நிர்பந்தித்தது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவோ, தீர்வுகானவோ உலக வர்த்தக அமைப்பால் முடியாத காரணத்தால், வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.

இது குறித்து உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் ராபர்டோ அசிவேடோ கூறுகையில், “ஒப்பந்தம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை போக்குவதற்கு இயலவில்லை” என்று கூறியுள்ளார்.

இதற்கு இடையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து வர்த்தக மேம்பாட்டு ஒப்பந்த தொடர்பாக உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு இந்தியாவை வலியுறுத்தினார். எனினும் இந்தியா, அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணியவில்லை.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால், வளர்ந்த நாடுகள் மட்டுமே இலாபம் பெரும் என்று ஏழை நாடுகளுக்கு எந்தவித பலனும் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.