Home கலை உலகம் த்ரிஷா, அனுஷ்காவுக்காக தோற்றத்தை மாற்றிய அஜீத்!

த்ரிஷா, அனுஷ்காவுக்காக தோற்றத்தை மாற்றிய அஜீத்!

639
0
SHARE
Ad

ajith-trisha-anushkaசென்னை, ஆகஸ்ட் 2 – தல 55 படத்தில் அஜீத் த்ரிஷாவுக்காக ஒரு தோற்றத்திலும், அனுஷ்காவுக்காக ஒரு தோற்றத்திலும் நடிக்கிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் தல 55.

படத்திற்கு இன்னும் பெயர் வைக்காததால் ரசிகர்கள் படத்தை “தல 55” என்கிறார்கள். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ajith-trishaத்ரிஷாவின் கணவர் கதாபாத்திரத்தில் வரும் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம். படத்தில் அஜீத், த்ரிஷா தம்பதிக்கு 5 வயது மகளும் உண்டு. அனுஷ்காவின் ஜோடியாக வரும் அஜீத் “சால்ட் அன்ட் பெப்பர்” என்ற நரைத்த தலையுடன் வருகிறாராம்.

#TamilSchoolmychoice

த்ரிஷா அஜீத்துடன் சேர்ந்து ஜி, கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். தற்போது 4-வது முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ajithபடத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல்வேறு தலைப்புகளை கையில் வைத்துக் கொண்டு அதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்ய கௌதம் முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.