படத்தில் ஒரே கதாநாயகிதான், அவர் அஞ்சலிதான் என பேசப்பட்டது. இதனால் அஞ்சலி மகிழ்ச்சியாக இருந்தார். இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ஒரு வலம் வரலாம் என திட்டம் போட்டார்.
படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகிதானாம். முதல் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தமாகிவிட்டார் என செய்தி பரவியது. இது உறுதி என தெரிந்ததும் அஞ்சலி அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.
படத்துக்கான முன்பணத் தொகையும் அவர் வாங்கிவிட்டார். இதனால் அவர் படத்திலிருந்து விலக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். தொடர்ந்து நடித்து கொடுத்துவிட்டு, இனி ஒரு கதாநாயகி வேடம் வந்தால் மட்டுமே ஏற்க வேண்டும் என தீர்மானத்தில் இருக்கிறாராம் அஞ்சலி.