Home நாடு ராஜநாகத்தை வைத்து ஆலயத்தில் வழிபாடு! காணொளியால் பரபரப்பு!

ராஜநாகத்தை வைத்து ஆலயத்தில் வழிபாடு! காணொளியால் பரபரப்பு!

614
0
SHARE
Ad

cobrasnakeviralஜாசின்,ஆகாஸ்ட் 5 – கேசாங் பாஜாங் இந்து ஆலயத்தில் 57 வயதான பக்தர் ஒருவரால்  எதார்த்தமாக எடுக்கப்பட்ட ராஜ நாகத்தின்  காணொளி ஒன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மே மாதம் தாமான் ரியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்தியாங்கார தேவி சக்தி பீடம் ஆலயத்தில் ஒரு ராஜ நாகத்தைக் கொண்டு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.இதை எஸ்.சுப்ரமணியம் என்பவர் தனது அதி நவீன திறன்பேசியில் காணொளியாகப் பதிவுச் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “இந்த காணொளியை என் நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்வதற்காக எடுத்தேன்.இதை முதன் முதலில் வாட்சாப் (Whatsapp)மூலம் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.என் காணொளியை பார்த்த பின் பலரும் எனக்கு அவர்களின் கருத்துகளை தெரிவித்தார்கள்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், “இது தான் எனது முதல் வாட்சாப் பயன்படுத்திய அனுபவம். பிறகு இந்த காணொளியை ஒரு இந்திய தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவதைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன்” என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

இந்த காணொளியை கடந்த ஜூஅலை 29 – ம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுவர்ணா செய்தி நிறுவனம் தனது முக்கிய செய்தி தொகுப்பில் வெளியிட்டது.

பிறகு இக்காணொளி பிற இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அவர்கள் இதனை இந்தியாவில் எடுக்கப்பட்டதாக கூறிவந்தனர்.

இது குறித்து சுப்ரமணியம் கூறுகையில், “என்னுடைய காணொளி இந்த அளவிற்கு உலக மக்களை சென்று அடையும் என்று எதிர்பார்க்கவில்லை.இது மலாக்கா கோயிலில் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்துக் கொண்ட சுவிட்சர்லாந்து பெண்மணி ஒருவர் கோயில் நிர்வாகிகளைத் தொடர்புக் கொண்டு பாராட்டியுள்ளார்” என்று மிகப் பெருமையுடன் கூறினார்.

இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் கே.எம் தினகேஸ்வர் சிவாசாரியார் கூறுகையில், “இந்த நாகம் மே மாதம் நடந்த ஒரு சிறப்பு பூஜைக்காக கொண்டு வரப்பட்டது.இப்பாம்பு விஷம் கொண்டதாக இருந்தாலும் சடங்குகளின் போது எந்த ஒரு ஆபத்தையும் விளைவிக்கவில்லை. எதிர்வரும் ஆகஸ்ட் 19 முதல் 30 வரை நடக்கவுள்ள பூஜையில் மீண்டும் அந்நாகம் கொண்டு வரும் பொழுது தங்களை அழைக்கும் படி தமிழ் நாடு மற்றும் டோக்கியோவை சேர்ந்த  தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன”என்று தெரிவித்துள்ளார்.

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எவ்வாறு அக்காணொளி எடுக்கப்பட்ட இடத்தை அறிந்து கொண்டனர் என்பது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அவர் மேலும் இது போன்ற பல காணொளிகளை நட்பு ஊடகங்களில் பதிவு செய்ய ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுவர்ணா செய்தியில் வெளியிடப்பட்ட அந்த காணொளியை கீழே காணலாம்:-