Home உலகம் உயிர்கொல்லி எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக வங்கி 1200 கோடி நிதி!

உயிர்கொல்லி எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக வங்கி 1200 கோடி நிதி!

987
0
SHARE
Ad

world_bank_headquartersவாஷிங்டன், ஆகஸ்ட் 5 – எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ரூ.1,200 கோடி (மலேசிய ரிங்கிட் 820 மில்லியன்) நிதி அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

எபோலா வைரஸ் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியர்ரா லியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

virus_2இந்நிலையில் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எபோலா வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்”.

#TamilSchoolmychoice

“வைரஸின் விளைவுகளை நான் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது சுகாதாரத் துறை ஊழியர்கள், குடும்பங்கள், சமூகத்தை அழித்து இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது”.

xf841g“ஏற்கனவே சுகாதார விஷயத்தில் வலுவில்லாமல் இருக்கும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோனில் எபோலா தாக்குதல் அந்நாடுகளை மேலும் வலுவடையச் செய்துள்ளது. எபோலா வைரஸ் பரவுவதை தடுத்து உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும்”.

“வைரஸ் பரவுவதை தடுக்க உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவி அளிக்கும்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க 50 நோய் தடுப்பு நிபுணர்களை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.