Home கலை உலகம் “கத்தி” படத்தை வெளியிடவே கூடாது – விடுதலைச் சிறுத்தைகள்!

“கத்தி” படத்தை வெளியிடவே கூடாது – விடுதலைச் சிறுத்தைகள்!

975
0
SHARE
Ad

kaththi,சென்னை, ஆகஸ்ட் 5 – நடிகர் விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள கத்தி படம், ராஜபக்சே கூட்டாளிகளின் பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றால், அதனை வெளியிடவே கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கூறியுள்ளது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரித்த கத்தி படம், பெரும் அரசியல் பிரச்சினையாகிவிட்டது. இந்தப் படத்தை வெளியிட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

kaththi (1)இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு பற்றி மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கூறியுள்ளதாவது, “பட இயக்குநரும்,தயாரிப்பாளரும் எங்களை சந்தித்தனர். தயாரிப்பு நிறுவனம் குறித்து விளக்கமளித்தனர்.

#TamilSchoolmychoice

எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூற வில்லை. இலங்கை இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.

kaththi2அப்படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது. இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குநரும்,தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்று கூறியுள்ளார் வன்னியரசு.