Home தொழில் நுட்பம் செப்டம்பர் 9 – ம் தேதி ஐபோன் 6 வெளியாகும் என எதிர்பார்ப்பு!

செப்டம்பர் 9 – ம் தேதி ஐபோன் 6 வெளியாகும் என எதிர்பார்ப்பு!

527
0
SHARE
Ad

iphone6கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 –  ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபோன் 6-ன் வெளியீடு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னணி நிறுவனமான ஆப்பிளின் தயாரிப்புகளுக்கு சந்தைகளில் நாளுக்குநாள் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபோன் 6-ன் அறிமுக விழாவினை சிறப்பானதாக நடத்த ஆப்பிள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது என தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறுகின்றன.

4.7 மற்றும் 5.5 அங்குல அளவில் வெளிவர இருக்கும் ஐபோன் 6, முந்தைய ஐபோன்களைக் காட்டிலும், நவீனமானதாகவும், சிறந்த இயங்கு திறனைக் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. சிறப்பான இயங்கு திறனுக்காக ஐபோன் 6-ல் ‘8 செயலி‘ (A8 Processor)  பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் வரலாற்றில் ஐபோன் 6-ன் வெளியீடு ஒரு வரலாற்று மைல் கல்லாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 2014-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் ஐபோன் 6 விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.