லண்டன், ஆகஸ்ட் 6 – ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டால் அதிக சலுகைகளை பெறலாம் என பிரிட்டன் அரசு உறுதி அளித்துள்ளது.
பிரிட்டன் குடியரசில் இருந்து தனி நாடகாப் பிரியும் கோரிக்கையை ஸ்காட்லாந்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்களிடையே இதற்கான வாக்கெடுப்பை வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு இடையே ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான வரம்புகள் உயர்த்தப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதியளித்துள்ளார்.
இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர், துணைப் பிரதமர் கிலெக், தொழிற்கட்சித் தலைவர் மிலிபண்டு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிந்தவுடன் 2015-ம் ஆண்டிற்குள், வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து வரம்புகளும் செயல்படுத்தப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்துடன் இணைந்து செயல்படும் ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற அதிகாரங்களை வலுப்படுத்த போதுமான ஆதரவு அளிப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பிரதமரின் இத்தகைய வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை ஸ்காட்லாந்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பத்தரிக்கைகள் குறிப்பிட்டு வருகின்றன.