Home 13வது பொதுத் தேர்தல் சுல்தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை- காலிட்

சுல்தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை- காலிட்

618
0
SHARE
Ad

kalidஷா ஆலாம், பிப்.21- சிலாங்கூர் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் மக்கள் கூட்டணிக்கு அரசின் முடிவு  மாநில சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவிக்கவில்லை என்று சிலாங்கூர் மந்திரிபுசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் கூறினார்.

சட்டமன்ற கலைப்பு நடவடிக்கை முறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்  என்ற தனது எதிர்பார்ப்பை மட்டுமே சுல்தான் வெளியிட்டதாக அவர் சொன்னார்.

மேலும் சட்டமன்றத்தை கலைப்பது  தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அதற்கான தேதி குரித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம் என்று அவர் அறிவித்ததாகவும் டான்ஸ்ரீ காலிட் கூறினார்.

#TamilSchoolmychoice

சட்டமன்றத்தை முன் கூட்டியெ கலைக்கும் மாநில அரசின் முடிவுக்கு சுல்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . மாறாக அவர் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டார். எனினும் அனைத்து நடவடிக்கைகளும் முறப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

சட்டமன்ற கலைப்பு முறப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சட்ட மன்றம் கலைக்கப்படும் தேதியை முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் டான்ஸ்ரீ காலிட் மேலும் தெரிவித்தார்.