கோலாலம்பூர், பிப்.21- ஐ.செ.க தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜொகூர் ஐ.செ.க தலைவர் டாக்டர் பூ செங் ஹவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்து தமக்கு எதிரான விசாரணையை தொடங்குமாறு பிகேஆர் தலைமைத் துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ஜொகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெய் வருத்தத்தோடு செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மசீச விலிருந்து விலகியதாகவும் தமது முன்னாள் மசீச உறுப்பியம் பற்றி கர்ப்பால் கேள்வி எழுப்பியிருப்பது பற்றியும் தமக்கு மிகுந்த வருத்ததை தந்துள்ளது என்றார்.
அம்னோ மாறவில்லை என்றாலும் தேசிய முன்னணியிலிருந்து மசீச விலக வேண்டும் என அவர் மசீசா வில் இருக்கும் போது கூறியதாக தெரிவித்தார். இருந்த போதிலும் கர்ப்பால் இது போன்ற குறையை கூறியிருப்பது எனக்கு மிகுந்த வருத்ததை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 30 ஆண்டுகள் அரசியலில் இருந்துவிட்டதால் தாம் அதிலிருந்து விலக வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறிய அவர், வரும் 13ஆம் பொது தேர்தல் இறுதி தேர்தலாகக் கூட அமையலாம் என்று விளக்கம் அளித்தார்.
வரும் பொது தேர்தலில் தம்மால் போட்டியிட முடியும் என நம்புவதாகவும் இறுதி முடிவு கட்சியைச் சார்ந்தது என அவர் தெரிவித்தார்.