Home நாடு மோசமடையும் பிகேஆர்-காலிட் இடையிலான மோதல்

மோசமடையும் பிகேஆர்-காலிட் இடையிலான மோதல்

612
0
SHARE
Ad

khalid ibrahim7கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – ஒரு காலத்தில் பிகேஆர் கட்சியின் முகமாக சிலாங்கூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உலா வந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் தற்போது பிகேஆர் கட்சியுடன் கொண்டுள்ள மோதல் தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

காலிட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவை பகிரங்கப்படுத்தப்பட்டு பிகேஆர் கட்சியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காலிட் தைரியம் இருந்தால் என் மீது ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுங்கள், அதை சந்திக்க நான் தயார் என சவால் விட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பேங்க் இஸ்லாம் வங்கி பங்குகள் வாங்கப்பட்ட  விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று  சைபுடின் நசுத்தியோன் காலிட் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடுகள் தொடர்பில்  காலிட் இப்ராகிம் பிகேஆரில் இருந்து நீக்கப்படலாம் என கட்சி வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் மூலம் சிலாங்கூர் மந்திரிபெசார் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பதைத் தடை செய்ய முடியும் என பிகேஆர் எதிர்பார்க்கின்றது.

நசுத்தியோனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலிட் இப்ராஹிம் கூறியிருப்பதாவது: “ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க நான் தயார். அந்த ஆதாரங்களை வைத்து ஊழல் தடுப்பு ஆணையம், அரச மலேசிய காவல்துறை, பேங்க் நெகாரா ஆகியவற்றிடம் புகார் செய்யுங்கள். எந்த புகாராக இருந்தாலும் சரி அந்த விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார்” என்  காலிட் இப்ராஹிம் கூறியுள்ளார்.

சிலாங்கூரில் நீண்டு கொண்டே போகும் இந்த விவகாரத்தினால், சிலாங்கூர் மாநில அரசு இயந்திரங்கள் செயலிழந்து கிடக்கின்றன என்றும் மாநில நிர்வாகம் தடுமாற்றத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றும் ஒரு சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.