கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிலாங்கூர் நீர் கட்டுமானத் திட்டத்தில் 2 மில்லியன் ரிங்கிட் நஷ்டமாகிவிட்டதாகவும் காலிட் இப்ராகிம் தனது ஃபேஸ்புக்கில் அஸ்மின் அலியை விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக காலிட் இப்ராகிம் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்த அஸ்மின் அலி, “காலிட் தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கக் கூடாது. அரசியலைப் பொறுத்தவரையில், வரைமுறையும், தனித்துவமும் இருக்க வேண்டும். காலிட் ஒருவேளை பாஸ் கட்சியில் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்தால், அக்கட்சியுடன் இணைந்து கொள்ளட்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.