Home இந்தியா முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்!

732
0
SHARE
Ad

jaswant_1910823fபுதுடெல்லி, ஆகஸ்ட் 8 – தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76) டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிடைத்துள்ள முதல் கட்ட தகவல்களின் படி,   ஜஸ்வந்த் சிங் நேற்று இரவு தனது இல்லத்தில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

jaswant-singh,இதையடுத்து ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய நிலைமை  ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த சிங், நடத்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பர்மர் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்க மறுத்தால் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.