Home கலை உலகம் சென்னையில் 15 இடங்களில் அம்மா திரையரங்கம்! ரூ.25-க்கு நுழைவுச் சீட்டு!

சென்னையில் 15 இடங்களில் அம்மா திரையரங்கம்! ரூ.25-க்கு நுழைவுச் சீட்டு!

520
0
SHARE
Ad

Hamlin_theatreசென்னை, ஆகஸ்ட் 8 – சென்னையில் முதற்கட்டமாக 15 இடங்களில் அம்மா திரையரங்கம் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு குளு குளு வசதியுடன் திரையரங்கம் கட்டப்பட உள்ளன.

அம்மா திரையரங்குகளில் ரூ.25க்கு அனுமதிச் சீட்டு(டிக்கெட்) விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள இடங்களில் ‘அம்மா திரையரங்கம்’ அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

#TamilSchoolmychoice

பெரும்பாலான திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட நிலையில், திரைப்பட கட்டணம் அதிகளவு உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் பொழுது போக்கு அம்சத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்த கட்டணத்தில் ‘அம்மா திரையரங்கம்’ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

madinat-jumeirah-theatre-heroமண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், ராயபுரம், மிண்ட், அண்ணா நகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி ஆகிய பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்து அம்மா திரையரங்கம் அமைப்பதற்கான கட்டிட வேலைகள் விரைவில் ஆரப்பிக்கப்படும்.

டிசம்பர் மாதம் இறுதிக்குள் அம்மா திரையரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த திரையரங்குகளில் ‘யு’ சான்றிதழ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும்.

மேலும் தியேட்டர்களில் குளு குளு வசதியும் செய்யப்படுகிறது. புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.

பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. திரைப்பட கட்டணமாக ரூ.25-க்கு குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவகங்களில் சாப்பிட்டு விட்டு, அம்மா குடிநீர் பாட்டிலுடன், இனி அம்மா திரையரங்கில் சென்னை வாசிகள் மகிழ்ச்சியாக திரைப்படம் பார்க்கலாம்.