இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். நரைத்த (பெப்பர் சால்ட்) தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சி அனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது.
ஏற்கனவே வீரம், மங்காத்தா படங்களில் நரைத்த முடியுடன் நடித்த அஜீத், நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் கறுப்பு நிற முடியுடன் நடிக்கிறார்.
கவுதம், அஜீத் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை என் தூக்கத்தை மறக்கடித்துவிட்டது. மேலும் படக்குழுவில் உள்ளவர்களுக்கு அஜீத்தும், அருண் விஜய்யும் இணைந்து உணவு சமைத்து பரிமாறியதை மறக்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டான் மகார்துர் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் கூறும்போது, அஜீத்தை ஒல்லியா பார்க்கும் போது சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நல்ல படத்தை உருவாக்க குழுவாக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.