Home இந்தியா வைகோ நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!

வைகோ நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!

490
0
SHARE
Ad

vaikoசென்னை, ஆகஸ்ட் 9 – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூரில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று பகல் 12 மணியளவில் தனது உதவியாளருடன் காரில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் கோவளம் அருகே சென்ற போது வைகோவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவருடன் இருந்தவர்கள் 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) சேவைக்கு தகவல் கொடுத்தனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 அவசர ஊர்தி மருத்துவ குழுவினர் வைகோவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அதே அவசர ஊர்தியில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Vaiko-Firstpost1அங்கு வைகோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த ம.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா விரைந்து வந்து வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பிறகு அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட வைகோ, தான் வழக்கமாக உடல் பரிசோதனை மேற்கொள்ளும் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைகோவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கியதாக ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.

வைகோ உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலறிந்து, ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மருத்துவமனையில் குவிந்தனர்.