Home இந்தியா ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய அதிமுக!

ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய அதிமுக!

803
0
SHARE
Ad

rajapakshe_kid_001சென்னை, ஆகஸ்ட் 9 – தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை இணையத்தளத்தில் இழிவுபடுத்தியதை தொடர்ந்து, ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டி கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.

இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை பற்றி அவதூறு கட்டுரை வெளியானதை தொடர்ந்து, யோசித்து வித்தியாசமான முறையில் சுவரொட்டிகளை அடித்து  அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

rajapakshe_kid_004இதன் விளைவாக சென்னைக்கு வந்த சிங்கள பிக்குகளுக்கு கடும் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று. அதுமட்டுமல்ல சென்னைக்கு விளையாட வந்த இலங்கை வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சுவரொட்டியில் ராஜபக்சேவை கழுதை போலவும், முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் போலவும் சித்தரித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

rajapakshe_kid_003அந்த சுவரொட்டியில் ”சிங்கத்தை சீண்டிப் பார்க்காதே.. செருப்படி கிடைக்கும் மறவாதே” என்று இருந்தது. மேலும் அந்த படத்தில் ராஜபக்சேவை கழுதை போல சித்தரித்து அவர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருந்தது.

கழுத்தில் மண்டை ஓடு படம் போட்ட சிவப்புத் துண்டும் காணப்பட்டது. இதேபோல நெல்லைப் பக்கம் போடப்பட்டிருந்த சுவரொட்டியில் சில்க் ஸ்மிதாவுடன் ராஜபக்சே குத்தாட்டம் ஆடுவது போல போட்டிருந்தனர்.

rajapakshe_kid_002ஜெயலலிதா காலில் ராஜபக்சே மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போலவும், ராஜபக்சேவுக்கு மரண அஞ்சலி செலுத்தப்படும் சுவரொட்டியும் போட்டு கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.