Home இந்தியா நலமுடன் வீடு திரும்பினார் வைகோ!

நலமுடன் வீடு திரும்பினார் வைகோ!

531
0
SHARE
Ad

vaikoசென்னை, ஆகஸ்ட் 9 – சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது வைகோவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

vaiko.jpg,அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலமணி நேரங்களில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். ‘தலைவர் வைகோ நலமாக உள்ளார். தோழர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். மீண்டும் அவர் தனது மக்கள் பணியைத் தொடர்கிறார்,” என்று அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.