Home நாடு இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் : பழனிவேல் – வேதமூர்த்தி இடையில் மோதல்

இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் : பழனிவேல் – வேதமூர்த்தி இடையில் மோதல்

599
0
SHARE
Ad

waytha1-300x209கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கென ஒதுக்கிய நிதி எவ்வளவு, அது யாருக்குக் கொடுக்கப்பட்டது, எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது குறித்த அறிக்கை மோதல்கள் தகவல் ஊடகங்களில் வலுத்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருந்த அறிக்கைகளுக்கும், பழனிவேலுவை நோக்கி ஏவப்பட்ட கேள்விக் கணைகளுக்கும் பதிலளிக்கும் விதத்தில் அவர் நேற்று விடுத்த அறிக்கையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஜூலை 2014 வரை பிரதமர் வெறும் 38 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே இந்தியர்களுக்கான மான்யமாக தன்னிடம் வழங்கினார் எனக் கூறினார்.

அதே வேளையில் அரசாங்கத்திற்குள் ஹிண்ட்ராஃப் சார்பாக வேதமூர்த்தியை துணையமைச்சராக பிரதமர் உள்ளே கொண்டு வந்தது பெரிய தவறு என்றும் பழனிவேல் சாடியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப்புடன் இணைந்தது அரசாங்கம் செய்த தவறு

G.Palanivel MIC Presidentஹிண்ட்ராப்புடன் உடன்பாடு ஒன்றில் பொதுத் தேர்தல் சமயத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டதும் தவறான நடவடிக்கை ஆகும் என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த சமயத்தில் பழனிவேல் இந்த நடவடிக்கைகளில் உடன்பாடான முறையில் நடந்து கொண்டார் என்பதும், பிரதமரின் முடிவுகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் தன்னிடம் 500 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ள பழனிவேல், வேதமூர்த்திதான் மக்களிடம் இருந்து வசூலித்த நன்கொடைகளுக்கும், வழக்குக்கென ஹிண்ட்ராப் சார்பாக  வசூலித்த பணத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும் என சவால் விட்டார்.

அவரைத் தொடர்ந்து சில மஇகா தலைவர்களும் வேதமூர்த்திக்கு எதிராக அறிக்கைகள் விடுத்து, ஹிண்ட்ராப் வசூலித்த பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டுகோள் விடுக்க, ஒரு சில ஹிண்ட்ராப் தலைவர்களுக்கும் அந்த அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை விடுத்தனர்.

பழனிவேலுவுக்கு 24 மணி நேர அவகாசம் கொடுத்து வேதமூர்த்தி சவால்

இதனைத் தொடர்ந்து இன்று தகவல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வேதமூர்த்தி பழனிவேலுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோடிக்கணக்கான ரிங்கிட்டை அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு செலவிடும் சூழ்நிலையில் இந்தியர்களுக்கென வெறும் 38 மில்லியன் ரிங்கிட்டை மட்டும் ஒதுக்கியுள்ளது  கேவலமானது என்றும் எலும்புத் துண்டை நாய்களுக்குத் தூக்கிப் போடுவது போன்றது என்றும் வேதமூர்த்தி பழனிவேலுவுக்கு பதில் கொடுத்துள்ளார்.

பழனிவேலுவும் அவரைச் சார்ந்தவர்களும் விடுத்த அறிக்கையில் உள்ள பொய்களை அவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும், அப்படி இல்லாவிட்டால், அவர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு தொடர்வேன் என்றும் வேதமூர்த்தி சவால் விட்டுள்ளார்.