சமீபத்தில் டுவிட்டர் வலைத்தளத்தில் நான் இல்லை, ஆனால் என் பெயரில் யாரோ மோசடி செய்கிறார்கள் என்று பல நட்சத்திரங்கள் தெரிவித்தனர், அந்த வகையில் இதில் இணைந்திருப்பவர் சின்னத்திரை பிரபலமான பாஸ்கி.
டுவிட்டர் வலைத்தளத்தில் இவரது பெயரில் போலி கணக்கை யாரோ உருவாக்கி. அதன் மூலம் விஜய், அஜித் ரசிகர்களிடம் சண்டை மூட்டி, அவர்களிடம் திட்டும் வாங்கியுள்ளார் பாஸ்கி. இது பாஸ்கி தானா? என்று பலருக்கு கேள்வி எழுந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் அவரே, காவல்துறையிடம் நேராடியாக சென்று, அந்த போலி கணக்கை உருவாக்கியவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார் பாஸ்கி.
Comments