Home அவசியம் படிக்க வேண்டியவை செல்ஃபி எடுத்த போது விபரீதம்! மலை உச்சியிலிருந்து விழுந்து தம்பதிகள் மரணம்!

செல்ஃபி எடுத்த போது விபரீதம்! மலை உச்சியிலிருந்து விழுந்து தம்பதிகள் மரணம்!

525
0
SHARE
Ad

cliff-top-walking-in-the-Algarve-1024x768போர்ச்சுகல், ஆகஸ்ட் 12 – போர்ச்சுகல் நாட்டின் காபோ டா ரோகா என்ற இடத்தில் உள்ள உயரமான இடமான எட்ஜ் ஆஃப் எ கிளிஃப் (edge of a cliff) என்ற சுற்றுலாத்தளத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், தங்களது திறன்பேசியின் வழி செல்ஃபி (தம்படம்) எடுக்க முயற்சி செய்த போது தவறி விழுந்து பலியாகினர்.

கடந்த சனிக்கிழமை தங்களது 5 மற்றும் 6 வயதைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுடன், போர்ச்சுகளிலுள்ள எட்ஜ் ஆஃப் எ கிளிஃப் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற அந்த தம்பதியினர், குடும்பத்துடன் தங்களை செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தம்பதிகள் இருவரும் தவறி விழுந்து பலியாகினர்.

இதைப் பார்த்த அங்கிருந்த ஸ்பானிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியர் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எனினும் கடலில் ஏற்பட்ட கடுமையான அலை காரணமாக மீட்புப் படையினரால் சனிக்கிழமை சடலங்களை மீட்க இயலவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.

தங்களது கண்முன்னரே பெற்றோர் விழுந்து இறந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் அந்த இரு குழந்தைகளும் தற்போது போலந்து நாட்டின் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.