Home வணிகம்/தொழில் நுட்பம் மலாயன் வங்கியின் எட்டிக்வா காப்பீட்டுத் திட்டம் சிங்கப்பூரில் அறிமுகமாகிறது!

மலாயன் வங்கியின் எட்டிக்வா காப்பீட்டுத் திட்டம் சிங்கப்பூரில் அறிமுகமாகிறது!

584
0
SHARE
Ad

maybankகோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – மலாயன் வங்கி (Maybank) தனது காப்பீட்டுப் பகுதியான ‘எட்டிக்வா’ (Etiqa) -வை, சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மலாயன் வங்கி கிளைகளிலும் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்றது.

நாட்டின் முன்னணி வங்கியான மலாயன், தனது காப்பீட்டு திட்டங்களின் ஒரு பகுதியான எட்டிக்வாவை சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்த அந்நாட்டு நிதி ஆணையத்திடம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் நிதி ஆணையம் தங்கள் நாட்டில் உள்ள 22 மாலயன் வங்கி கிளைகளிலும் ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை கடந்த ஜூன் மாதம் 13- தேதி வழங்கியது. இதன் மூலம் அந்நாட்டில் மாலையன் வங்கி தனது நம்பகத்தன்மை வாய்ந்த எட்டிக்வா காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

இது பற்றி சிங்கப்பூரில் உள்ள மலாயன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோக் லிம் ஹாங் தட் கூறுகையில், “சிங்கப்பூரில் எட்டிக்வாவின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாக இருப்பது, மலாயன் வங்கிக்கு மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அறிமுகப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.”

#TamilSchoolmychoice

“மேலும் மற்ற காப்பீட்டுத் திட்டங்களை விட இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மாலையன் கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கான சேவையும் இந்த திட்டத்தின் மூலம் அதிகரிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், மலாயன் வங்கியின் பங்குச் சந்தை உச்சத்தை அடையும் என்று கூறப்படுகின்றது.