Home கலை உலகம் ராபின் வில்லியம்ஸ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

ராபின் வில்லியம்ஸ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

543
0
SHARE
Ad

robin_williamsசென்னை, ஆகஸ்ட் 13 – நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகமே இன்று சோக கடலில் மூழ்கியிருக்கிறது. தன் தனிப்பட்ட நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டதே இந்த சோகத்திற்கு காரணம்.

இவர் இறப்பு குறித்து கமல்ஹாசன் கூறியதாவது;-

#TamilSchoolmychoice

“ஹாலிவுட்டில் இதுவரை எந்த கதாநாயகனும் அழுததில்லை, ஆண்களின் அழுகைக்கே ஒரு கண்ணியத்தை கொடுத்தவர் ராபின் வில்லியம்ஸ்.மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மையென தெரியவந்தால், தனது வாழ்நாள் முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதற்காக நான் அவரை வெறுக்கிறேன்.இப்படி வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும் குணம், கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.