Home கலை உலகம் பெண் காவலருடன் நடனமாடிய சர்ச்சை – ஷாருக்கான் விளக்கம்!

பெண் காவலருடன் நடனமாடிய சர்ச்சை – ஷாருக்கான் விளக்கம்!

591
0
SHARE
Ad

shahrukh-khanகொல்கத்தா, ஆகஸ்ட் 13 – நடிகர் ஷாருக்கான், கொல்கத்தாவில் பெண் காவலரை தூக்கி நடனமாடியதால் உண்டான சர்ச்சைக்கு தற்போது பதிலளித்துள்ளார்.

கொல்கத்தாவின் நேதாஜி அரங்கத்தில் நடந்த “ரக்ஷா பந்தன் விழா”வில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராக்கி கயிறு கட்டியுள்ளார்.

அப்போது நிகழ்ச்சியில் நடனம் ஆடிய நடிகர் ஷாருக்கான், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை தூக்கி ஆடியுள்ளார். பின்னர் பெண்ணும் அரங்கில் ஷாருகானுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“எப்படி சீருடையில் இருந்த ஒரு பெண் காவலரை மேடையில் நடனமாட அனுமதிக்கப்பட்டார்?” என்று பாஜக தலைவர் ரிதிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

shaukan_policedanceஇது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறுகையில், “ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சீருடை வேறுபாடு என்பது அற்பமானது, இது விசித்திரமாக இருக்கிறது.

இது சீருடை பற்றியது அல்ல, அந்த காவலர் ஒரு பெண் என்பதால் தான் சர்ச்சையாகியுள்ளது. மேலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இதை நான் முட்டாள்தனமாகவும், வேடிக்கையாகவும் கருதுகிறேன். இது பற்றி மேற்கொண்டு எதையும் நான் பேச விரும்பவில்லை என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.