Home நாடு 5 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் – காலிட் அதிரடி முடிவு!

5 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் – காலிட் அதிரடி முடிவு!

507
0
SHARE
Ad

Selangorஷா ஆலம், ஆகஸ்ட் 13 –  சிலாங்கூர் மாநிலத்தில் 5 மத்திய செயற்குழு உறுப்பினர்களை, மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நீக்கியதால், பக்காத்தான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் அனுமதியோடு நேற்று அந்த 5 பேருக்கும் பதவி நீக்க கடிதம் அனுப்பப்பட்டது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட 5 செயற்குழு உறுப்பினர்களில், எலிசபெத் வோங் (புக்கிட் லஞ்சான்), டாக்டர் டாரோயா ஆல்வி ( செமெந்தா) ஆகிய இருவரும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள். டத்தோ டெங் சாங் கிம் (சுங்கை பினாங்கு), வி.கணபதிராவ் (கோட்டா ஆலம் ஷா) மற்றும் இயான் வோங் ஹியான் வா (ஸ்ரீ கம்பாங்கான்) ஆகிய மூவரும் ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

#TamilSchoolmychoice

இவர்களைத் தவிர மற்றொரு பிகேஆர் மத்திய செயற்குழு உறுப்பினரான ரோட்ஸிலா இஸ்மாயில் வெளிநாட்டில் இருப்பதால், அவரது பதவி நீக்கம் மட்டும் இன்னும் முடிவுசெய்யப்படாமல் உள்ளது.

பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரான ரோட்ஸியா, காலிட்டுக்கு ஆதரவாக இருப்பார் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்த 5 பேரும் கூட்டாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் இனி வாராந்திர மாநில செயற்குழு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இம்ராகிமை தவிர்க்கப் போவதாக அறிவித்தனர்.

அவர்களின் அறிக்கை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், சிலாங்கூர் சுல்தானிடம் கலந்தாலோசித்த காலிட், அதிரடியாக இந்த 5 பேரையும் பதவி நீக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.