Home உலகம் ஈராக் புதிய பிரதமராக ஹைதர் அல்-அபிதி நியமனம் – அமெரிக்கா ஆதரவு!  

ஈராக் புதிய பிரதமராக ஹைதர் அல்-அபிதி நியமனம் – அமெரிக்கா ஆதரவு!  

441
0
SHARE
Ad

haider-al-abadiபாக்தாத், ஆகஸ்ட் 13 – ஈராக்கில் புதிய பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹைதர் அல்-அபிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் அரசியல் பிரச்சனை, உள்நாட்டுத் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் புதிய பிரதமரை அந்நாட்டின் அதிபர் ஃபுவத் மாசூம் நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “புதிய பிரதமராக ஈராக் நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹைதர் அல்-அபிதி நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு புதிய அமைச்சரவை அமைக்க 30 நாட்கள் கால அவகாசம் அளித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

Barrack-Obama3ஈராக்கில் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹைதர் அல்-அபிதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈராக் அரசியல் முக்கியமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அனைத்து இனத்தவரையும் கொண்ட அமைச்சரவையை புதிய பிரதமர் அறிவிக்க வேண்டும். சிறப்பான அரசினை ஏற்படுத்த புதிய பிரதமருக்கும், அதிபர் ஃபுவத் மாசூமுக்கும், அவைத் தலைவர் ஜபூரிக்கும் அமெரிக்கா தனது முழு ஆதரவை அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.

எனினும், ஹைதர் அல்-அபிதி புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டதற்கு, முன்னாள் பிரதமர் அல்-மாலிக்கியின் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெர்வித்து வருகின்றனர்.