Home இந்தியா உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் இன்று பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் இன்று பதவியேற்பு!

572
0
SHARE
Ad

banumathiசென்னை, ஆகஸ்ட் 13 – உச்ச நீதிமன்ற நீதிபதியாக, பானுமதி  என்ற முதல் தமிழ் பெண் நீதிபதியாக  இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31 பேர். ஆனால், தற்போது 27 நீதிபதிகள் மட்டும் உள்ளனர்.

இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜீ வழங்கியுள்ளார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வழக்கரிஞர் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி ஆர்.பானுமதி தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர்.  தனது 33-வது வயதில் 1988ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சியில் நீதிபதியாக பணியாற்றியபோது நாட்டையே உலுக்கிய பிரேமானந்தா சாமியார் வழக்கை விசாரித்தார். அந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த பிரிவுகளில் சாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும் ரூ.67 லட்சம் அபராதம் விதித்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி மிகவும் பிரபலமானவர்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதிக்கு இன்று மாலை 6.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.