இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 14 – பாகிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து எதிர்கட்சிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்ததால் முக்கிய நகரங்களில் செல்பேசி மற்றும் இணைய சேவைகள் உட்பட அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் மக்கள் நலன் மீது பிரதமர் ஷெரீப் அக்கறை இன்றி செயல்படுவதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இன்று அங்கு 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பிரதமர் உரையாற்றும் தருணத்தில் பேரணி நடத்தினால் மக்கள் மத்தியில் ஆதரவு பெரும் என கருதிய இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது.
முக்கிய கட்சிகள் பேரணி நடத்தினால், மக்கள் மத்தியில் ஆளும் அரசு பற்றிய எதிப்பலைகள் உருவாகும் என்று கருதப்பட்டது. சுதந்திர கொண்டாட்டங்களின் பொது அது தேவையற்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்து எனக் கருதிய பாகிஸ்தான் அரசு தொழில்நுட்ப சேவைகளை முடக்கி உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்ரான்கானின் போராட்டத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த மதத் தலைவர் தாஹிருல் காத்ரியும் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.