Home நாடு ஒரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு எதிராக முன்னாள் உதவியாளர் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கு!

ஒரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு எதிராக முன்னாள் உதவியாளர் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கு!

492
0
SHARE
Ad

Anwar-Ibrahim-565x375கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புகாரி அஸ்லான், நேற்று அன்வாருக்கு எதிராக 50 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

அன்வார் இப்ராகிம் தன்னை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்றும், தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

முகமட் சைபுலின் வழக்கறிஞர் ஸாம்ரி இட்ருஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் அன்வார் சார்பில் வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் தற்காப்பு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். வழக்கு மேலாண்மை வரும் அக்டோபர் 8 -ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றத்தின் துணை பதிவாளர் நோர்பௌஸானி முகமட் நோர்டின் கட்டளையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice