Home இந்தியா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சக்கரங்கள் வெடித்தன. பயணிகள் உயிர் தப்பினர்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சக்கரங்கள் வெடித்தன. பயணிகள் உயிர் தப்பினர்

646
0
SHARE
Ad

Air Indiaதிருவனந்தபுரம், ஆகஸ்ட் 17– இந்த ஆண்டு விமானங்களுக்கு ஆகாத ஆண்டு போலும்! ஒன்றன் பின் ஒன்றாக விமான விபத்துகள் தொடர்கதையாக ஆங்காங்கு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

மாலத்தீவிலிருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்-இந்திய விமானம் (ஏ-320) கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியபோது அதன் பின்புற சக்கரங்கள் வெடித்தன.

எனினும், பதட்டமான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் மற்றும் விமானத்திலிருந்த ஊழியர்கள் என அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

#TamilSchoolmychoice

எனினும் பயணிகள் அனைவரும் மிகவும் பதட்டமடைந்து காணப்பட்டனர். நண்பகல் 12.50 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, இந்தியத் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

சக்கரங்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.