‘அஞ்சான்’ படம் பற்றி இணையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் திடீரென்று முளைத்ததன் காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. ஆனால் திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு இன்னும் 2 நாட்களுக்கு அனுமதிச் சீட்டுகள் கிடைக்காது என்பதுதான் உண்மை நிலை.
சில நேரங்களில் தவறான கருத்துக்கள்கூட படத்தின் விளம்பரமாக உதவும் என்பார்கள். அது இந்தப் படத்துக்கும் பொருந்திவிட்டது எனலாம். எப்போதும் வியாழன், வெள்ளியன்றே பெரிய படங்களுக்கு சிறப்புக் காட்சி போடுவார்கள்.
சூர்யா பேசும்போது, “என்னோட எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த ‘அஞ்சான்’ படம் 1500 தியேட்டர்களில் வெளியாகியிருக்கு. எந்த ரசிகரும் அனுமதிச் சீட்டு கிடைக்க வில்லையினு வீட்டுக்கு திரும்பி போகக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக இத்தனை திரையரங்குகளில் வெளியிட்டோம்.
வெளியான எல்லா இடங்களில் இருந்தும், நல்ல படம் எனவும் நல்ல கருத்துக்களும் வந்தன. இந்தப் படத்தை ரசிகர்கள் குடும்பத்தோட வந்து பார்க்கிறார்கள்.
‘அஞ்சான்’ படம் ஐந்து பேருக்கு மட்டும் பண்ற விருந்து கிடையாது. எல்லாருக்கும் பண்ற பெரிய விருந்து. எல்லாருக்கும் என்ன பிடிக்கணும்னு மட்டும்தான் பார்த்து கொடுக்க முடியும்.
இதில், சிலர் வேண்டுமென்றே படம் சரியில்லையினு பரப்பி வருவதுதான். இதில் படம் பார்க்காதவர்கள்கூட சேர்ந்து கொண்டதுதான் ரொம்ப வேதனை.
இப்படி தேவையில்லாமல் தவறான கருத்துக்களை வெளியிட்டு ஒருவரின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பது நல்ல விஷயம் இல்லை” என வருத்தப்பட்டார் சூர்யா. விமர்சனம் செய்வதை தவறென்று கூறவில்லை. தனி நபர் விமர்சனம் வேண்டாம் என்று கூறியுள்ளார் சூர்யா.