Home தொழில் நுட்பம் எச்டிசி ஒன் எம்8 திறன்பேசிகளின் விண்டோஸ் பதிப்பு வெளியானது!

எச்டிசி ஒன் எம்8 திறன்பேசிகளின் விண்டோஸ் பதிப்பு வெளியானது!

589
0
SHARE
Ad

main-1-usநியூயார்க், ஆகஸ்ட் 20 – எச்டிசி நிறுவனத்தின் ‘ஒன் எம்8’ One (M8) திறன்பேசிகளின் விண்டோஸ் இயங்குதளப் பதிப்பு நேற்று  வெளியானது.

எனினும் தற்போது அமெரிக்க சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிகளின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலே உள்ள படத்தினை பார்க்கும் பொழுது ‘போட்டோஷாப்’ (Photoshop) பயன்பாட்டின் மூலமாக போலியாக தயாரிக்கப்பட்ட படங்கள் என்று எண்ணிவிட வேண்டாம்.

#TamilSchoolmychoice

அண்டிரோய்டு இயங்குத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒன் எம்8 திறன்பேசிகள், தற்போது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் போன் 8.1 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி தனது திறன்பேசிகளின் உருவாக்கத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து தயாரித்த ஒன் எம் 8 திறன்பேசிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதன் வர்த்தகத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த மைக்ரோசாஃப்ட், எச்டிசியிடம் ஒன் எம் 8 திறன்பேசிகளை விண்டோஸ் பதிப்பில் வெளியிட ஒப்பந்தம் மேற்கொண்டது.

HTC-One-M8மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி நேற்று முதல் அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வந்த எம் 8 திறன்பேசிகளின் விண்டோஸ் பதிப்பு, விளம்பர விலையாக இரண்டு வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் $99-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இது பற்றி அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் கோர்டன் கூறுகையில், “மைக்ரோசாஃப்ட்டின் கோரிக்கைக்கு இணங்க விண்டோஸ் பதிப்பில் எம் 8 திறன்பேசிகள் உருவாக்கப்பட்டன.

எனினும், எம்8 திறன்பேசிகளுக்கான அடிப்படை இயங்குதளம் அண்டிரோய்டு ஆகும்” என்று அவர் கூறியுள்ளார். ஒன் எம் 8 திறன்பேசிகளின் விண்டோஸ் பதிப்பில் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் அண்டிரோய்டு பதிப்பினைப்  போலவே  இருக்கும்.

எனினும், சிறு மாறுதலாக அதன் பின் பகுதியில் உள்ள கேமராவுடன் ஒரு டெப்த் சென்சிங் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.