திரிஷாவுக்கு 30 வயதாகிறது. ராணாவுக்கு 28 வயது. தெலுங்கில் ‘லீடர்’ படம் மூலம் ராணா நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் அஜீத்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தார்.
திரிஷா தெலுங்கு படங்களில் நடித்தபோது ராணாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். துபாயில் நடந்த திரைப்பட விழா விருந்து நிகழ்ச்சியில் அருகருகே அமர்ந்து காதலில் விழுந்தனர். அந்த படங்கள் இணையத்தளத்தில் பரவியது.
ஆனால் சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக ஆந்திர பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இருவரையும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்க முடியவில்லை. திரிஷாவுக்கு அவரது தாய் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பேசப்பட்டது.
ராணா கோட்சூட்டுடன் கம்பீரமாக இருந்தார். திரிஷா சேலை கட்டி எளிமையாக வந்தார். இருவரும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர். ஜோடியாக மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பரிசு பொருட்களும் கொடுத்தனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இதர தெலுங்கு நடிகர்கள் அனைவருக்கும் மனைவிமாரை அழைத்து வந்து இருந்தனர். ராணா, திரிஷாவை எல்லோரும் திருமணமான கணவன்– மனைவி போலவே பார்த்தார்கள்.
இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து இருக்கலாம் என்றும் கிசுகிசுத்தனர். சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ஜோடியாகவே புறப்பட்டுச் சென்றனர்.
திரிஷா தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட திரிஷாவை அழைத்ததாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.