உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது வர்த்தகம் பொருளாதாரம் உட்பட பல பிரிவுகளில் தடை விதித்தன.
இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யா அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியது. பெரும் பொருளாதார நாடான ரஷ்யாவின், அதிரடி நடவடிக்கை காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் முறையிட்டனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணையகுழுவும் உற்பத்தியாளர்களின் நஷ்டங்களைப் ஈடுகட்டும் விதமாக தடை உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக 125 மில்லியன் யூரோக்களை அளிக்க முன்வந்துள்ளது.