Home இந்தியா பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி!

பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி!

475
0
SHARE
Ad

pakistan-flag-mapடெல்லி, ஆகஸ்ட் 20 – பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது பாகிஸ்தானை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி கடந்த மே மாதம் பதவி ஏற்ற பின்னர், இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த மோடியும், நவாஸ்செரீப்பும் ஆலோசித்துள்ளனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 25ம் திகதி இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசத் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தலையிடும் இந்த செயல் மோடிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதாசிங், பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித்தை தொடர்பு கொண்டு, பிரிவினை தலைவர்களுடன் தற்போது பேசுவது சரி அல்ல, காஷ்மீர் தலைவர்களை அழைத்து பேசாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

narendra-modi1ஆனால் அதையும் மீறி, காஷ்மீர் பிரிவினை தலைவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இதனை உளவுத்துறை மூலம் அறிந்த மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகிய மூவரிடம் கலந்து ஆலோசித்து இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர்ஷாவை சந்திப்பது உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.