Home நாடு பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் காலமானார்!

பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் காலமானார்!

771
0
SHARE
Ad

Datuk Noor Zahidiபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 – கிளந்தான் மாநில தேசிய முன்னணி பெங்காலான் கூபார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் (வயது 57) புற்று நோய் காரணமாக இன்று காலை காலமானார்.

சீனாவில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று காலை 5.45 மணியளவில் காலமானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ அப்துல்லா யாகோப் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நூர் சாஹிடியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். ஆனால் எப்போது அவரது சடலம் கிளந்தானுக்கு கொண்டு வரப்படும் என்பது பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 13 வது பொதுத்தேர்தலில், நூர் சாஹிடி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் சஹாருன் இப்ராகிம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் இஸாட் புஹாரி இஸ்மாயில் புஹாரி ஆகியோரை 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.