Home உலகம் பயணிகள் பேருந்தைத் தாக்கிய உக்ரைன் போராளிகள் – 50 பேர் பலி!

பயணிகள் பேருந்தைத் தாக்கிய உக்ரைன் போராளிகள் – 50 பேர் பலி!

655
0
SHARE
Ad

Tibet bus accidentகீவ், ஆகஸ்ட் 20 – உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மீண்டும் ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கேட்டு போராடி வரும் ரஷ்யா ஆதரவுப் போராளிகள் கடந்த மாதம் 17-ம் தேதி மாஸ் விமானம் எம்எச் 17-ஐ ஏவுகணை கொண்டு தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 295 பயணிகளும் உயிரிழந்தனர்.

n4-600x390இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கிழக்கு உக்ரைனில் லுகர்னஸ்க் நகரின் மேற்கு பகுதியில் போராளிகளை சமாதனப்படுத்தும் நோக்கத்துடன் வெள்ளை கொடிகளை கட்டிக் கொண்டு தொடரணி சென்ற பேருந்துகளை ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கினர்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலில் 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலை உக்ரைன் இராணுவம் உறுதி செய்துள்ளது.

title0hஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். பேருந்தின் மீது உக்ரைன் இராணுவம் தான் தாக்குதல் நடத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.