Home உலகம் சிரியா வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை – எஃப்ஏஏ அறிவிப்பு!

சிரியா வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை – எஃப்ஏஏ அறிவிப்பு!

488
0
SHARE
Ad

FAA

வாஷிங்டன், ஆகஸ்ட் 20 – சிரியாவின் வான்வெளியில் இராணுவ மற்றும் பயணிகள் விமானங்கள் பறக்க அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (Federal Aviation Administration) தடை விதித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் கடும் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிரியாவின் வான்வெளியில் விமானங்கள் பறப்பது பாதுகாப்பானதாக இருக்காது என எஃப்ஏஏ கருதுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், விமானங்கள் பறப்பதற்கான அனுமதியையும் எந்த ஒரு நிறுவனமும் விரும்புவதில்லை. அதனால் சிரியாவின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை தடை செய்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், சிரியாவின் வான்வெளியில் விமானங்கள் பறப்பது குறித்து எச்சரிக்கை செய்து இருந்த எஃப்ஏஏ, தற்போது தடை விதித்துள்ளது. இதேபோல் கடந்த 8-ம் தேதி முதல் ஈராக் மீதும் அமெரிக்க விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் வான்வெளிப்பகுதி, ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வருவதற்குப் பயன்படுகின்றது. எனினும், போராளிகள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதால், மாஸ் விமானம் எம்எச் 17-க்கு ஏற்பட்ட நிலை மற்ற விமானங்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கவனமாக உள்ளது.

ஏற்கனவே சிரியாவின் இராணுவ விமானத்தை போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.