Home நாடு சுல்தான் – ஹாடி சந்திப்பிற்குப் பிறகு தான் அஸ்மின் அலி பெயர் முன்மொழியப்பட்டது!

சுல்தான் – ஹாடி சந்திப்பிற்குப் பிறகு தான் அஸ்மின் அலி பெயர் முன்மொழியப்பட்டது!

502
0
SHARE
Ad

Datuk-Seri-Abdul-Hadi-Awangபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 – பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் (படம்) கடந்த ஜூலை 31-ம் தேதி சிலாங்கூர் சுல்தானை சந்தித்த பிறகு தான், மந்திரி பெசார் பதவிக்கு இரண்டு பேரின் பெயரை முன்மொழிய முடிவெடுத்ததாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹைசான் கையாட் கூறுகையில், “சுல்தானை சந்தித்த பிறகு பாஸ் தலைவர், சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு அஸ்மின் அலி மற்றும் வான் அசிசாவின் பெயரை முன்மொழிய முடிவு செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுடன், ஹாடி நல்லுறவை வைத்திருக்கிறார் என்றும் சுஹைசான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசாவை முன்மொழிய சுல்தான் மறுத்திருக்க வேண்டும் அதனால் அஸ்மின் அலியின் பெயரையும் பாஸ் தலைவர் இணைத்திருக்கிறார் என்றும் சுஹைசான் தெரிவித்துள்ளார்.

வான் அசிசாவிற்குப் பதிலாக பாஸ் கட்சி உறுப்பினர்களுள் ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கலாம். எனினும் பக்காத்தானுக்குள் அனுக்கமான ஒரு உறவில் இருப்பதால் பாஸ் கட்சி அந்த முடிவை எடுக்கவில்லை என்றும் சுஹைசான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தான் பாஸ் காலிட்டுக்கு வழங்கி வந்த ஆதரவில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு வான் அசிசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் சுஹைசான் கூறியுள்ளார்.