தொழில்நுட்பங்களின் முன்னோடியாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளத்திற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்ற இயங்குதளங்களைக் காட்டிலும் மாபெரும் எதிர்பார்ப்பும், வர்த்தகமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிதானது.
எனினும் கடைசியாக வெளியான விண்டோஸ் 8-ற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தும், அந்த இயங்குதளம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாததால் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எதிர் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாகவும், அந்த நிகழ்வின் போது விண்டோஸ் 9 அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியின் போது, பேசும் செயலியான கார்டனாவும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.